தனது மரணத்தையே வீடியோ எடுத்த ஐஎஸ் தீவிரவாதி (வீடியோ இணைப்பு)
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் ராணுவத்தால் சுடப்பட்டதில் பலியானார். அவர் உடலில் கட்டியிருந்த கமெராவில் பதிவாகியுள்ள இந்த காட்சி பரபரப்பை ஏ...


ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் ராணுவத்தால் சுடப்பட்டதில் பலியானார். அவர் உடலில் கட்டியிருந்த கமெராவில் பதிவாகியுள்ள இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும்பகுதியை கைப்பற்றி தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஐஎஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் ஈராக் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பலியான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ அவர் உடலில் கட்டியிருந்த கமெராவில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தீவிரவாதி ஒருவர் ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடுகிறார்.
அவருடன் இருக்கும் மற்றொரு ஐஎஸ் வீரர் ராக்கெட் வெடிகுண்டை வெடிக்கவைக்க முயற்சி செய்கிறார்.
பின்னர் தனது தலையில் கமெராவை பொருத்தியுள்ள ஐஎஸ் வீரர் வேகமாக முன்னேறி செல்கிறார்.
ஒரு வீட்டின் உள்ளே புகுந்து அவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திகொண்டே செல்கிறார்.
இந்நிலையில் அவர் மீது ராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்துகிறார்.
பின்னர் காயம்பட்ட ஐஎஸ் வீரர் மண்ணில் சரிகிறார். இறுதியில் சூரியனை பார்த்தப்படி அந்த வீடியோ முடிவது போல் உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.