கண்கள் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை! குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்

பிரித்தானியாவில் கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை குணப்படுத்த முடியாமல், குழந்தையின் பெற்றோர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது...


பிரித்தானியாவில் கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை குணப்படுத்த முடியாமல், குழந்தையின் பெற்றோர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஒரு அங்கமான வேல்ஸ்(Wales) நாட்டில் உள்ள Cwmbran நகரத்தில் டானில்லி டேவிஸ்-ஆண்ட்ரூ ஸ்மித்(Danielle-Davis Andrew Smith) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சமீபத்தில் கண்களே இல்லாமல் பெண் குழந்தை ஒன்று பிறந்ததால், அவர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

டானில்லி கர்ப்பமாக இருந்தபோது மருத்துவமனையில் தனது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது, அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையின் மூளையில் நீர்க்கட்டி வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

குழந்தைக்கு Anopthalmia என்ற நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் கருகலைப்பு செய்ய மனமில்லாததால், குழந்தையை பெற்றுக்கொள்ளவே டானில்லி விரும்பியுள்ளார்.


இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் டானில்லி பிரசவித்தபோது, கண்களே இல்லாமல் பெண் குழந்தை பிறந்ததை பார்த்து பெற்றோர்களும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு கண்கள் உள்ள பகுதிகள் மூடியே இருந்ததால், ஒரு வேளை அங்கே வீக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர்.

ஆனால், தற்போது குழந்தைக்கு 8 வாரங்கள் ஆனபோதும் கண்கள் பகுதிகள் மூடியவாறே உள்ளதால், குழந்தையை Anopthalmia நோய் கடுமையாக தாக்கி இருப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் குழந்தையால் பார்க்க முடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மிக அரிதாக தோன்றும் இந்த நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது குழந்தைக்கு Daisy பெயர் சூட்டியுள்ள தாயார் இதுகுறித்து பேசியதாவது, குழந்தை பிறந்த பிறது அதனால் பார்க்கவே முடியாது என்ற உண்மையை மருத்துவர்களில் ஒருவர் கூட என்னிடம் கூறவில்லை.

குழந்தையால் பார்க்க முடியாவிட்டாலும், எங்கள் குடும்பத்தில் பிறந்துள்ள இந்த தேவதையை பிற குழந்தைகள் போலவே வளர்ப்போம் எனவும் பேசியுள்ளார்.


இதற்கிடையே குழந்தையின் கண்கள் உள்ள பகுதியில் செயற்கையான கண்ணாடி கண்களை பொருத்துவதால், அங்கே கண்கள் உள்ளது போல் மற்றவர்களுக்கு காட்சி தரும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் குழந்தைக்கு 18 மாதங்கள் நிறைவடையும்போது Great Ormond Street மருத்துவமனையில், இந்த சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.












Related

34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தின் சக்கரத்தில் மறைந்து பயணம் செய்த இளைஞர்! (வீடியோ இணைப்பு

இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் விமானத்தின் முன் சக்கர பகுதியில் உள்ள லேண்டிங் கியரில் மறைந்து கொண்டு பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ...

10 ஆண்களை திருமணம் செய்து சூப்பராக வாழ்க்கை நடத்தும் கில்லாடி பெண் (வீடியோ இணைப்பு

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 10 ஆண்களை திருமணம் ஜாலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டினா பேரியன்டாஸ் (Liana Kristina Barrientos).திரும...

பொருளாதாரத் தடைகள் விலக்கப் படும் வரையில் அணு ஒப்பந்தம் கிடையாது!:ஈரான்

அண்மையில் ஈரானுக்கும் P5+1 நாடுகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் எட்டப் பட்ட அணு ஒப்பந்தத்தில், தான் கைச்சாத்திட்டு அதனை இறுதி செய்ய வேண்டும் எனில் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் படும் முதல் நாள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item