ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஜனாதிபதியின் சகோதரர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரும், ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவருமான பி.ஜி.குமாரசிங்கவிற்கு மூன்று மடங்கு சம்பள உயர்வு வ...


இத்தீர்மானம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர்சபை குறிப்பிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவரின் மாதாந்த சம்பளம் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக இருந்த நிலையில் அதனை 30 லட்சம் வரை உயர்த்த ஶ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமானது தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்குவதுடன், அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைய பணிப்பாளர் சபை இந்த சம்பள உயர்வு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அடிப்படை சம்பளம் டெலிகொம் மற்றும் மொபிடெல் ஆகிய இரு நிறுவனங்களிலும் கிடைக்கும் மேலதிக கொடுப்பனவுகளுடன் சேர்த்தால் சுமார் ஒரு கோடி ரூபாவை சம்பளமாக பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகொம் நிறுவன பணிப்பாளர் சபையின் இந்த சம்பள உயர்வு முடிவுக்கு நிறுவனத்தின் பங்காளி நிறுவனமான மலேசியாவின் மெக்ஷிஸ் நிறுவனம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பணிப்பாளர் சபை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறு கண்மூடித்தனமான தீர்மானம் எடுப்பதாயின் மெக்ஷிஸ் நிறுவனம் தமது பங்குகளை விற்க நேரிடும் என குறித்த நிறுவனம் டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளதுடன் பங்குகளை விற்பது குறித்து மெக்ஷிஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.