ஜனாதிபதி நாளை மறுதினம் பாகிஸ்தானுக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 5 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தான...


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.
ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி மாமூன் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் உத்தியோகர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.