நூற்றுக்கணக்காண பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்: சுற்றிவளைத்த பொலிஸ்
கனடாவை சேர்ந்த 6 நபர்கள் நூற்றுக்கணக்கான பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான ஆசி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_22.html
நூற்றுக்கணக்கான ஆசிய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக ரொறொன்ரோ (Toronto) மற்றும் மொன்றியல் (Montreal) மாகாணங்களில் இருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் ஒருவர் கூறுகையில், இவர்கள் 500-ற்கும் மேற்பட்ட பெரும்பாலான கொரியா மற்றும் சீனா நாட்டைச் சேர்ந்த பெண்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் ஹலிவக்ஸ் (Hilivicks), வினிபெக் (winipeg), வன்கூவர் (Vancouver), கல்கரி (Calgary), எட்மன்டன் (Edmond) உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கும்பல் தங்கள் விபச்சார கிளைகளை நடத்தி வந்துள்ளனர்.
இதுவரை இவர்களிடமிருந்து கணனிகள், கைப்பேசிகள், வாகனங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தீவிரமாய் தேடி வருகிறேம் எனவும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate