“அம்மாவை விட்டு விடுங்கள் - என்னையோ தந்தையையோ பழிவாங்குங்கள்”! - என்கிறார் நாமல்
அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என் மீதும், என் தந்தை மீதும் அதைச் செய்யுங்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார...


திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன். எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரில் நானும் தந்தையும் மட்டுமே அரசியலில் ஈடுபட்டோம். எனது தாயாரும் இரண்டு சகோதரர்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. எவருக்கேனும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என்னையும் எனது தந்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். உண்மையான விபரங்கள் வெளியிடப்படும் என நம்புகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.