ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இலங்கை!
சட்டவிரோத மீன்பிடியை மேற்கொண்டமை காரணமாக இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.இதன் மூலம் இலங்கையில் இருந்து ...


பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் சர்வதேச கடற்பரப்பில் 2012ம் ஆண்டு முதல் சட்டவிரோத மீன்பிடியில் இலங்கை ஈடுபட்டு வந்துள்ளது. வ்வித செய்மதி கண்காணிப்புக் கருவிகளும் இன்றி அரசாங்கம், இந்து சமுத்திர பகுதியில் அதன் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்து வந்தது என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் லத்தீன் அமெரிக்க நாடான பெலிஸ் நாட்டுக்கு எதிராக இவ்வாறான தடையை 2014ம் ஆண்டு மார்ச்சில் விதித்த போதும் பின்னர் டிசம்பரில் நீக்கிக்கொண்டது.