திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐதேகவில் இணைய முனைவது வெட்கக்கேடு! - பரிகசிக்கிறார் ரஞ்சன்ராமநாயக்க
திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள முயற்சிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என சமூக சேவைகள் மற்றும் கால்நடைவள...


ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்துக்கு முதல் நாள் வரையில் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தலைவா ரணிலுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சேறு பூசினார். வெட்கம் கெட்ட திஸ்ஸ அத்தநாயக்க இன்று தாம் செய்த காரியத்திற்காக வேதனைப் படுவதாக குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க எப்படியாவது மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள முயற்சிக்கின்றார்.
ரணில் - மைத்திரி போலி ஆவணமொன்றை காண்பித்தே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் திஸ்ஸ அத்தநாயக்க சுகாதார அமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொண்டார். மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாவார் என ஒரு போதும் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்பார்க்கவில்லை. போலி உடன்படிக்கை பற்றிய உண்மைகளை திஸ்ஸ அத்தநாயக்க அம்பலப்படுத்தினால், அவரது கோரிக்கை குறித்து கொஞ்சமேனும் கவனம் செலுத்த முடியும். அவ்வாறு இன்றி திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சிக்குள் இணைத்துக் கொண்டால் அது ஆபத்தானது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.