மனைவி தற்கொலை! கணவனும் தற்கொலை செய்ய முயற்சி!
இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. சுபாகரன் சுமதி (வயது 24 ) ...


சுபாகரன் சுமதி (வயது 24 ) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது,
வவுனியை சேர்ந்த சுபாகரன் என்பவருக்கும் இளவாலையை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கு கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் மனைவியின் நகையை அடைவு வைத்தமை தொடர்பில் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே குறித்த நபரின் மனைவி இன்று காலை தூக்கிட்டு மரணம் அடைந்துள்ளார்.
அதேவேளை மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுபாகரனுக்கு தெரியவர அவரும் தன்னைத் தானே தாக்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.