வாழ்வா? சாவா?: மரணத்தின் பிடியில் எகிப்து முன்னாள் ஜனாதிபதி

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு வருகிற 16 ஆம் திகதி மரண தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கெய்ரோ நீதிமன்றம் தெர...

muhammed_morsi_002


எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு வருகிற 16 ஆம் திகதி மரண தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கெய்ரோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதல் அதிபர் முகம்மது மோர்சி(63).

முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

இவரது வன்முறை செயல்கள் அதிகரித்ததால் மக்கள் போராட்டத்தில் இறங்கியதையடுத்து இராணுவம் தலையிட்டு ஆட்சியை கவிழ்த்தது.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு சிறையில் கலவரத்தை ஏற்படுத்தி தப்பித்தது, உளவு பார்த்தது, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், லெபானானின் ஹிஸ்போலா அமைப்பினர், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை ஆகியவற்றுடன் சேர்ந்து சதி செய்தது, தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் மோர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ தலைவர்கள் மீது சுமத்தப்பட்டது.


இவர்களில் சுமார் 100 பேருக்கு ஏற்கனவே தனித்தனியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மோர்சிக்கும் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து எகிப்து சட்டப்படி மரண தண்டனை பற்றிய தீர்ப்புகளை, மத குரு ‘கிராண்ட் முப்தி’ பரீசிலனை செய்து தனது கருத்துக்களை தெரிவிப்பார்.

இந்த தண்டனை தொடர்பாக தலைமை முப்தி ஆய்வு செய்து, கருத்து தெரிவித்த பின்னர் யூன் 2-ஆம் திகதி (நேற்று) கெய்ரோ நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அறிவிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை முப்தியின் பரிந்துரை நேற்றுதான் நீதிபதியிடம் வந்து சேர்ந்தது.

இதையடுத்து, அந்த பரிந்துரையையும், முப்தியின் கருத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால் இறுதி தீர்ப்பு வரும் 16-ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷபான் எல் ஷமி தெரிவித்துள்ளார்.

Related

உலகம் 2657131480457895647

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item