மருமகளைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த மாமனார்
பஞ்சாப் மாநிலத்தில், மாமனார் ஒருவர் மருமகளைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பஞ்சாப்பில் உள்ள பதேகர்ச...

பஞ்சாப்பில் உள்ள பதேகர்சாகிப் என்ற மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் முனால் (27) மற்றும் சயம் சப்ரா இருவருக்கும் இரு வீட்டு பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் நடந்துள்ளது.
ஆனால் சப்ராவின் பெற்றோர் வரதட்சணை கேட்டு முனாலை தொடர்ந்து துன்புறுத்தியதால், தனது மகள் முனால், நல்லபடியாக வாழவில்லை என்ற எண்ணம் முனாலின் அப்பாவை வதைத்தபடியே இருந்துள்ளது.
இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முனாலை சுட்டுக்கொன்ற அவரது மாமனார், மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த செய்தியை கேட்ட முனாலின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து தன் மகளின் இறப்புக்கு காரணமான அந்தக் குடும்பத்தினர்கள் முனாலின் கணவர், தங்கை, மற்றும் அவரது தாயார் மீது பொலிசில் புகாரளித்துள்ளார்.
தற்போது பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.