13 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து சகோதரிகள்!

சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்றசகோதரியும், அவர்களின் மகள் சண்முக...


சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்றசகோதரியும், அவர்களின் மகள் சண்முகப்பிரியா என்ற சகோதரியும் புனிதமிக்க ராமலாளன் நோன்பு நோற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தபோது வியப்பின் உச்சிக்கு சென்றோம். காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம். அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,
சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார். சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.

Related

இஸ்லாம் 5826636142398347407

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item