பிரபஞ்சம் பற்றி கூறி மனிதர்களை வியக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்: மரணத்தின் பிடியில் தவிக்கும் பரிதாபம்
உலகம் போற்றும் இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தன் வாழ்க்கை பற்றி உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கருந்துளைக் கதிர்வீச்சு குறித்து ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_58.html

கருந்துளைக் கதிர்வீச்சு குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தபோது உலகமே வியந்தது.
பிரபஞ்சத்தின் பிறப்பு குறித்து கூறியுள்ள கருத்துக்கள், எழுதிய நூல்கள், மிகவும் பிரபலமானது.
மோட்டார் நியூரான் நோயால் நீண்ட நெடுங்காலமாக சக்கர நாற்காலியுடன் முடங்கிப் போய் விட்ட ஹாக்கிங்(73), தனது மரணம் குறித்துப் கூறி உள்ளார். இது அனைவரையும் உருக வைத்துள்ளது.
உடல் ரீதியாக முற்றிலும் செயலிழந்து போகும் ஒருவருக்கு தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள மற்றவர்கள் உதவ வேண்டும். அந்த உரிமையை மறுப்பது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
நாளை எனக்கு வலி மிகுந்தால், என்னுடைய அன்புக்குரியவர்களுக்கு நான் பாரமாக மாறினால், நிச்சயம் அந்த பாரத்தை நான் அனுமதிக்க மாட்டேன். என்னை மாய்த்துக் கொள்ளவே முடிவு செய்வேன்.
மற்றவர்கள் எனக்கு அப்போது உதவ வேண்டும். என்னால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை என்ற நிலை வரும்போது தொடர்ந்து உயிரோடு இருப்பதால் யாருக்கும் பயன் கிடையாது. அதை ஏற்க முடியாது.
இப்போது எனது மரணத்தை மெது மெதுவாக தொடங்கும் திட்டம் என்னிடம் இல்லை. இன்னும் பிரபஞ்சம் தொடர்பாக பல விடயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது, அதற்குள் நான் சாக மாட்டேன் என்றே கருதுகிறேன்.
மேலும் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் சிறார்களாக இருந்தபோது அவர்களுடன் ஓடியாட முடியாமல் போனதுதான் எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளது.
நான் அந்த விளையாட்டுத் தனத்தை இழந்து விட்டேன். இப்போதெல்லாம் பல நேரங்களில் நான் தனிமையில் உள்ளதைப் போல உணரும் நிலை ஏற்படுகிறது. எனது உடல் நிலையும் அதற்கு ஒரு காரணம். சில நேரங்களில் பலர் என்னுடன் பேச பயப்படுகின்றனர்.
அல்லது நான் பதில் தருவதற்காக காத்திருப்பதற்கு அவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை.
இதனால் நான் பல நேரங்களில் சோர்வடைந்து விடுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்ததைப் போல நீச்சலடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போதும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இவர் அளித்துள்ள பேட்டி வருகிற 15 ஆம் திகதி பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate