வடக்கில் மீண்டும் போர் வெடிக்குமா? இனவாதம் பேசும் மஹிந்தவுக்கு எச்சரிக்கை
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, வடக்கில் மீண்டும் போர் ஆரம்பிக்கப் போவதாக முன்னாள் ஐனாதிபதி மஹிந்த கூச்சலிடு...

9 வருடங்களாக நாட்டை கொள்ளையடித்த ஒருவர் தன் ஊழல்களை மறைப்பதற்கும் ஆட்சியை பிடிப்பதற்கும் மீண்டும் நாடகத்தை ஆரம்பித்து விட்டார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகர் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம் நீதிமன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் இந்த தாக்குதலை மேற்கொண்ட மக்கள் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தினர்.
மக்களால் சந்தேகநபர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர் பின்னர் கொழும்பில் இருக்கிறார். எனவே மக்கள் நம்பிக்கையற்றே இந்த தாக்குதலை நடத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தையும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டு மீண்டும் வடக்கில் போர் தொடங்கி விட்டது எனவும் பயங்கரவாதம் தலை தூக்கி விட்டது எனவும் கூறுவதன் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் இனவாத பேய்களை உலாவ விடுவதற்கு மஹிந்த முயற்சிக்கிறார். எனவே இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.