இன்று பிறந்தநாள்! தற்கொலை செய்த மாணவி!

ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்ப...

hatton_girl_death_002
ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த உதயகுமார் பிரவீனா என்ற 19 வயது மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவி காதல் விவகாரத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஹற்றன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே குறித்த மாணவி அவருடைய அறையில் தூக்கிட்டு கொண்டுள்ளார். வீட்டில் இருந்த தாய் தனது இரண்டாவது மகளை பாடசாலையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


பாடசாலையில் சில பிரச்சினைகள் காரணமாக மேற்படி மாணவி தனது உயர் தர கல்வியை வீட்டியிலிருந்தவாறே மேற்கொண்டுள்ளார், இவருக்கு காதல் தொடர்பு இருப்பதாகவும் மாணவியின் தாயார் தெரிவித்தார். அத்துடன் குறித்த மாணவிக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடதக்கது.
பிறந்தநாள் தினத்தன்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது அவருடைய பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரண விசாரணைகளின் பின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

Related

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா சரீரப்...

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட...

வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு - Leader

வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு - Leader ஹக்கீம் உட்பட பலர் நியமனம்! الحمدلله...! சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item