பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டது
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலோர காவல்துறை...


இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலோர காவல்துறையினர் இவ்வாறு 685 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிகின்றன.
இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் செய்யப்பட்டுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தனுஷ்கோடி கடற்கரை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(hiru)