அமெரிக்க ஜனாதிபதி வருட இறுதியில் இலங்கை விஜயம்: லக்ஸ்மன் கிரியெல்ல
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த வருட இறுதியில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன்...


பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை இன்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.எனினும் மேலதிக தகவல் எதனையும் அவர் வெளியிடவில்லை.
இதேவேளை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை, எனவே அந்தப் பொறுப்பை பொதுமக்களிடம் கையளித்து பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.