வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை
கோடீஸ்வர வர்த்தகர் முஹம்மட் சியாமின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் சந்தேகநபராக கருதப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் க...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_139.html

இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனும் அடங்குவார்.
இந்நிலையிலேயே இன்று அவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியிலான 4 சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம் வைத்திருந்த வழக்கிற்காக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.