நபர் ஒருவரை சரமாரியாகத் தாக்கிய கருணா
வாழைச்சேனை பகுதியிலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவ...


அத்துடன், தன்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும் தாக்கப்பட்ட எஸ்.வனராஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைபாடு சமர்ப்பித்துள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித முறைபாடுகளும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.