தற்போதைய அரசாங்கத்தின் 5 முக்கியஸ்தர்களுக்கு ஆபத்தா?
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை கேலி செய்த தற்போதைய அரசாங்கத்தின் 5 முக்கியஸ்தர்கள் தொடர்பில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின...


முன்னாள் பிரதமர் 1980ம் ஆண்டு ஹற்றனிலுள்ள தோட்ட அதிகாரியின் விடுதிக்கு சென்ற போது 5 பிரமுகர்களை அவரை கேலி செய்துள்ளனர்.
பின்னர் அவர் பொலிஸில் முறையிட்டதன் பின்னர் ஹற்றன் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகள் என நிரூபித்த போதிலும் குறித்த ஐவரும் தண்டனையை அனுபவிக்காமல் தாம் செய்த தவறிற்கு மன்னிப்பு கோரி தண்டனையிலிருந்து தப்பித்து கொண்டுள்ளனர்.
குறித்த ஐவரும் தற்போதைய அரசாங்கத்திலுள்ள மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில் காணப்படுகின்றனர்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஹற்றன் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 1980ம் ஆண்டின் ஆதாரங்களை திரட்டி வருவதற்காக ஹற்றன் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதுடன்,
இந்த குற்றங்களை ஆதாரங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முனைந்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.