யுத்தத்தினால் அநாதரவான பெண்களுக்கு நிதியுதவி
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படவுள்...


இதன்படி பெண்களின் சுயதொழிலுக்காக 15 ஆயிரம் ரூபா நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 15 ஆயிரம் பயனாளிகள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோரின் பொருளாதார நிலை குறித்து தற்போதைய அரசாங்கம் வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றது.