எதிர்வரும் தேர்தலுக்காக 25,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 25,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்ப...


கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய 15,000 கண்காணிப்பாளர்களை தாம் நியமிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்சி தெரிவிக்கின்றார்.
தேர்தல் காலத்தினை முழுமையாக கண்காணிப்பது தபால் வாக்களிப்பு தொடர்பான கண்காணிப்பு தேர்தல் தினத்திற்கான கண்காணிப்பு மற்றும் நடமாடும் சேவைகளின் கண்கணைிப்பு என
நான்கு பிரிவின் ஊடாக தமது கண்காணிப்பாளர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை எதிர்வரும் தேர்தலின் நிமித்தம் 10,000 கண்கானிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கெபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
திறைமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாள் ரசங்க ஹரிச்சந்திர குறிப்பிடுகின்றார்.