பசிலின் மனைவிக்கு வந்த சோதனை

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைமுகம் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் ...

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைமுகம் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் புஷ்பா ராஜபக்ச என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் கீழ் குறித்த அறக்கட்டளை இயங்கப்பட்டுள்ளது.
துறைமுகம் நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியின் பொறுப்பாளரான Colombo International Container Terminal என்ற நிறுவனம் ஒரே காசோலையில் நேரடியாக குறித்த 600 மில்லியன் பணத்தை புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளை வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளனர்.

குறித்த நிறுவனம் அறக்கட்டளையாக நிறுவப்பட்டிருந்தாலும், அதனை உருவாக்கியவர்கள் அந்த அறக்கட்டளையின் பணத்தினை தனிப்பட்ட முறையில் மாத்திரம் பயன்படுத்துவதாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.
அவ் சீன நிறுவனத்திற்குரிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பின்னாள், முன்னாள் அரசியல் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனா நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் போது குறித்த அரசியல் முக்கியஸ்தர் அவரது நிறுவனத்திற்கு சேர வேண்டிய 600 மில்லியன் தரகு பணத்தினை நேரடியாக பெற்றுக்கொள்ளாமல் புஷ்பா அறிக்கட்டளை கணக்கில் வைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் உறுதியாக்கப்பட்ட பின்னர் இவ் ஊழல் மோசடியில் தொடர்புடையவர் குற்றபுலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


Related

குர்ஆன் அவமதிப்பு வழக்கு

அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவுபுனித குர்­ஆனை அவ­ம­தித்­த­தாக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்தி தொட­ரப்­பட்­டி­ருந்த வழக...

உள்நாட்டில் ஐ.எஸ். அச்சுறுத்தலில்லை

இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு; புலனாய்வுப் பிரிவு உஷார் நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­பி­னரின் எத்­த­கைய செயற்­பா­டு­களும் உள்­நாட்டில் இல்லை. அது தொடர்­பி­லான அச்­சு­றுத்­தல்­களும் இது­...

பொரளை பள்ளி தாக்குதல்

சந்தேக நபர்களான இரு பிக்குகளை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவுபொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பௌத்த குருமார் இரு­வ­ரையும்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item