நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித...


இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற பொலிஸ்காரர் கொல்லப்பட்டார்.
வாகன சாரதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இந்தநிலையில் கருணாதாஸவை விடுவிக்க ஆயுததாரிகள் பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரியிருந்தனர்.
எனினும் அவரின் விடுவிப்புக்காக பணம் செலுத்தப்பட்டதா? என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை.