அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழு ஐ.தே.கவில் இணைந்து போட்டி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப் பட்டதை எதிர்த்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் ஐ. ம. சு. முவிலிருந்து வெ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப் பட்டதை எதிர்த்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் ஐ. ம. சு. முவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ. தே. கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக மஹிந்தவை எதிர்த்து வெளியேறிய குழுவில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் பிரதானமானவர்.
அர்ஜுனவும் அவரோடு அப்போது வெளியேறியோரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐ. தே. க அரசுடன் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதர வளித்தனர்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ. ம. சு. மு. முன்னணியில் போட்டியிட இடமளித்ததால் அர்ஜுன ரணதுங்க உட்பட அவரோடு வெளியேறியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.