நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சம்பூர் முதலீட்டு வலய காணி தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள கடிதம் உண்மையாக இருக்குமானால், ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ரீஸ் லிமிடெட் ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_357.html

ஏற்கனவே இந்தக்காணியை விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அரசுடையாக்கி அதில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர முடியும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார்.
எனினும் இதனை ஆட்சேபித்து கேட்வே லிமிடெட், மனுத்தாக்கல் செய்து விசேட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் கடந்த 20ஆம் திகதியன்று இடைக்கால தடையுத்தரவை நீடிக்கக்கோரி குறித்த நிறுவனம் மனு செய்தபோதும் அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
ஜூன் 15ஆம் திகதிவரை இந்த விடயத்தை வழக்குடன் தொடர்புடைய தரப்புக்கள், முன்னைய நிலைமையை கடைபிடிக்க வேண்டும் (அதாவது இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்) என்றும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டிருந்தது.
எனினும் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரனை கோடிட்டு பல ஊடகங்கள், ஒருப்பக்க செய்தியை மாத்திரம் அதாவது சம்பூர் தொடர்பான விசேட வர்த்தமானிக்கு இடைக்கால தடை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று செய்தியை மாத்திரம் வெளியிட்டன.
இது பிழையான செய்தி என்ற அடிப்படையில் சம்பூரில் மீளக்குடியேறக்கோரும் மக்கள் உட்பட்டவர்கள் மத்தியில் இது பரப்பப்பட்டது.
இதனையடுத்து சுமார் 70 பேர் வரை சம்பூர் காணியில் தற்காலிக கொட்டைகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்து மனுதாரர் தரப்பு நேற்று மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இது தொடர்பில் கேட்வே நிறுவனம் சார்பில் பொலிஸிடம் முறையிட்டபோதும் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பு தமது மனுவில் குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தநிலையிலேயே மனுதாரர் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்று பிரதமநீதியரசர் தெரிவித்தார்.
court_002