சுதந்திர கட்சியில் மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்காதிருக்க இறுதி தீர்மானம் - சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காதிருக்க இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனா...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காதிருக்க இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்காதிருப்பதற்கான இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொது தேர்தலில் போட்டியிடுகின்றீர்களா? என மாத்தளையில் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், அதனை ஆராய்ந்து பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியை சீர்குலைக்க பல்வேறுப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதி;பதி சந்திரிக்கா பண்;டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து நாட்டை நிர்வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.