54 வருடங்களின் பின்னர் கியூபாவில் திறக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகம்
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் தூதரக உறவு முறிந்தது. அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ...


அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் தூதரக உறவு முறிந்தது.
அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கியூபா உதவி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து இரு நாடுகளிலும் செயல்பட்டு வந்த தூதரகங்கள் மூடப்பட்டன. கடந்த 54 ஆண்டுகளாக இருநாடுகளும் எதிரிகளாக செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் இருநாடுகளும் பிரச்சினைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்ள முடிவு செய்தன.
அதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒப்புதலின் பேரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி, கியூபா வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோத்ரி கியூசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூக பேச்சுவார்த்தை முடிந்து சமரசம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து மீண்டும் தூதரக உறவு ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கியூபா தூதரகம் இன்று திறக்கப்பட்டது. அதே போன்று கியூபா தலைநகரம் ஹவான்னாவில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டது.
54 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு கொடிகளும் பறக்க தொடங்கியுள்ளன.