மன்னராக வேண்டிய தேவை எனக்கு இல்லை – ஜனாதிபதி
மன்னராக வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும், நாட்டை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_69.html
பொலன்னறுவையில் நேற்று (23) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
"பொலன்னறுவை இராசதானியில் 732 வருடங்களுக்கு பின்னர், அரசத் தலைவராக தெரிவானாலும் நான் மன்னர் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். மன்னரை போன்று ஆடைகளை நான் அணிவதில்லை. ஜனாதிபதி என்ற வகையிலுள்ள எல்லையற்ற அதிகாரங்களை பயன்படுத்தி அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் நான் செயற்படுவதில்லை. பொருளாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம், நாட்டிற்கு தேவையான அரசியல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே நான் முயற்சிக்கின்றேன்"