கறுப்பு ஜுலைக்கான திட்டத்தை தீட்டும் மகிந்த?

எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிங்கள, தமிழ் மக்கள் இடையே மீண்டும் இனக்கலவரத்தினால் இரத்தம் தோய்ந்த மோதல் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக...


எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிங்கள, தமிழ் மக்கள் இடையே மீண்டும் இனக்கலவரத்தினால் இரத்தம் தோய்ந்த மோதல் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்காக ஜுலை மாதத்தை தெரிவு செய்ததற்கு காரணம் இலங்கை இனப்பிரச்சினையை உக்கிரமடையச் செய்த தமிழர் வரலாற்றில் வடுவாக கறுப்பு ஜூலை காணப்படுகிறது.

ஜூலை மாதத்தில் ஏதோ ஒரு வகையில் மோதல் நிலையொன்றை ஏற்படுத்திவிட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கோபமடைய செய்ய முடியும் என்பதால் மகிந்த தரப்பினர் இம் மாதத்தை தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டம் சமீபத்தில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வைக்கூட, யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

அத்துடன், யாழ் நீதிமன்றில் பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடுத்துவதிலும் இத்தரப்பினர் பின்நின்று செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தினால் யுத்த வெற்றியினை நினைவு கூறுவதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பாடசாலை மாணவியின் கொலை வழக்கின் சந்தேக நபரை வெளியிட்டு பொது மக்களிடையே ஆத்திரத்தை உண்டு பண்ணும் நோக்கத்திலும் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் இதற்கு முன்னர் இவ்வாறான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன எனினும் இந்தச் சம்பவத்தினை இனவாத ரீதியாக செயற்பாடென பிரச்சாரத்தை பரப்புவதற்கு சமூக வலைத்தளங்களை அவர்கள் தற்போது மிகப்பெரியளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மகிந்த தரப்புக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகப்புத்தகம் போன்றவையினாலும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதோடு ஊடகப் பிரிவுகளை ஸ்தாபித்து இந்தப் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜபக்சவிற்கு நெருக்கமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சில கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு ஜூலைத் திட்டத்தின் அடுத்த சில திட்டங்கள் எதிர்வரும் சில வாரங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவி கவனவை நனவாக்குவதற்கு இலகுவான முறையில் மக்களிடத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இனவாதத்தைத் தூண்டி விடுவதற்கே மகிந்த தரப்பினர் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கருத்துக்களின் மூலம் இத்திட்டங்கள் தெளிவாக நிரூபமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

தலைப்பு செய்தி 2123573942393064721

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item