இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறார் இளவரசர் ஹரி
பிரிட்டன் இராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த இளவரசர் ஹரி வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_832.html

பிரிட்டன் இராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த இளவரசர் ஹரி வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரிட்டன் இராணுவத்தில் சேர்ந்த பின்பு, கடந்த 10 ஆண்டுகளில் சவால் மிக்க பல இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது. ஆப்கானிஸ்தானில் இரு முறை சண்டையிடச் சென்றேன்.
எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவங்களை அப்போது பெற்றேன்
எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவங்களை அப்போது பெற்றேன்
என்று தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் கெப்டன் ஹரி வேல்ஸ் என்று அறியப்படும் இளவரசர் ஹரி (30), 2005 ஆம் ஆண்டில் அதிகாரிப் பயிற்சி வீரராகச் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பயங்கரவாதிகளுடன் போரிட்டார்.
இராணுவத்தின் விமானப் பிரிவில் சேருவதற்காக 2009 இல் பயிற்சி மேற்கொண்டார். 2012 ஆம் ஆண்டில் போர்க்கள ஹெலிகொப்டர் விமானியாகச் செயற்படத் தொடங்கினார். அதேயாண்டு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.
தற்போது அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
ஜூன் மாதம் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்


Sri Lanka Rupee Exchange Rate