இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் : சீனா
இலங்கையின் வர்த்தக பங்காளி என்ற வகையில், நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்குவதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_548.html
இலங்கையின் வர்த்தக பங்காளி என்ற வகையில், நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்குவதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தயாராகவுள்ளதாக சீனா தெரிவிக்கின்றது.
சீனாவின் பீஜிங் நகரில் நியூஸ் பெஸ்ட்டின் செய்தியாளர் கெத்ரினா ச்சாங்குடனான நேர்காணலிலேயே துறைமுக திட்டத்தின் பிரதானிகள் இதனைக் கூறினர்.
சைய்னா ஹாபர் தனியார் நிறுவனத்தின் உப தலைவர் இதன் போது கருத்து தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புமிக்க வர்த்தக பங்காளி என்ற ரீதியில் அனைத்து ஆவணங்கள் மற்றும் அனுமதி தொடர்பில் நாம் நன்றாக ஆராய்ந்து பார்த்தோம் என தெரிவித்தார்.
இந்த நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், எமது வர்த்தக பங்காளியான இலங்கை அரசாங்கமே அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் வழங்கியது என்று, தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த நிர்மாணப்பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எழுத்துமூலம் எமக்கு அறிவித்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் உப தலைவர் கியோலிஎன்ங் டென் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்துடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவை சைய்னா ஹாபர் தனியார் நிறுவனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எடுக்கவில்லை அதனால் இலங்கையின் வர்த்தக பங்காளி என்ற ரீதியில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சைய்னா ஹாபர் தனியார் நிறுவனத்தின் உப தலைவர் கியோலிஎன்ங் டென் தெரிவித்தார்.