திருமணமான பெண்ணை காதலித்த 10 வயது சிறுவன்: அபராதம் விதித்த நீதிமன்றம்
பாகிஸ்தானில் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாக...


பாகிஸ்தானில் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியை சேர்ந்த பங்க்லானி(10) என்ற சிறுவன், பக்ரானி என்ற வேறொரு பழங்குடியினத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டுள்ளான்.
அப்பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும், இதனால், இதனால் இரு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் இவ்விவகாரம் பழங்குடியின நீதிமன்றமான ‘ஜிர்கா’ வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் விசாரணையின் முடிவில் 10 வயது சிறுவனுக்கு 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஜிர்கா உத்தரவிட்டது.
இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் 50000 ஆயிரம் ரூபாய் அபராதத்தை உடனடியாக கட்டியதுடன், எஞ்சிய தொகையை 3 மாதங்களில் செலுத்துவதாக உறுதியளித்தனர்.
பழங்குடியின் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே இது குறித்து விசாரித்து வருவதாக சிந்து மாகாண தலைமை பொலிஸ் அதிகாரி உமர் துபெய்ல் கூறியுள்ளார்.