உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்: ஈபில் டவரை மிஞ்சும் உயரம்…..அபார சாதனை படைத்த பிரான்ஸ் (வீடியோ இணைப்பு)
பிரான்ஸ் நாட்டின் Saint-Nazaire நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2013ம் ஆண்டு முதல் இந்த கப்பலை தயாரிக்கும் ப...


பிரான்ஸ் நாட்டின் Saint-Nazaire நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2013ம் ஆண்டு முதல் இந்த கப்பலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.
’Harmony of the Seas’ என பெயரிடப்பட்ட இந்த கப்பலின் கட்டுமானப்பணி முழுவதுமாக நிறைவு பெற்றவுடன் இதன் ஒட்டு மொத்த எடை 2 லட்சத்து 27 ஆயிரம் டன்னாக இருக்கும்.
சுமார் 1,187 அடி நீளமுள்ள இந்த கப்பலின் உயரமானது பாரீஸில் உள்ள ஈபிள் டவரை விட 50 மீற்றர்கள் அதிக உயரம் கொண்டதாகும்.
உலகில் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்ற சொகுசு கப்பல்களின் அகலத்தை விட இது சில மீற்றர்கள் அதிக அகலம் கொண்டது.
சுமார் 2,500 பேர் ஈடுப்பட்டுள்ள இந்த கட்டுமானப்பணி முடிவடைந்தவுடன், முழு அளவிளான சோதனை ஓட்டம் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும்.
16 அடுக்கு மாடிகளுடன் உடைய இந்த கப்பலில் 2,100 பேர் ஊழியர்களாக செயல்படுவதுடன், இதில் சுமார் 6360 பேர் வரை ஒரே சமயத்தில் பயணம் செய்யலாம்.
சொகுசு கப்பலின் ஒட்டுமொத்த பணியும் நிறைவடைந்தவுடன், அடுத்தாண்டு மே மாதம் பிரித்தானியாவின் Southampton துறைமுகத்திலிருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா துறைமுகத்திற்கு தனது முதல் பயணத்தை தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.