பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்ட மகன்: அம்பலமான தகவல்
அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் இறப்பு சான்றிதழ் அவரது மகன் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவை பிறப்பிடம...


அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் இறப்பு சான்றிதழ் அவரது மகன் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவை பிறப்பிடமாக கொண்ட ஒசாமா பின்லேடன், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள அப்போதாபாத் என்ற இடத்தில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.
அதன்பிறகு அவரது மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில், பின்லேடனின் இறப்பு சான்றிதழை கேட்டு அவரது மகன் கடிதம் எழுதியுள்ளதை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டுள்ளது.
விக்கிலீக் வெளியிட்டுள்ள அந்த ஆவணத்தில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதர் கிளன் கீசர், உங்களுடைய கடிதம் கிடைத்தது, ராணுவ நடவடிக்கையின்போது இதுபோன்ற தனிநபர் கொலைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
எனவே, வெளியுறவு சட்டநிபுணர்கள் இது போன்ற ஆவணங்கள் வழங்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உன்னுடைய தந்தை கொலைசெய்யப்பட்டதன் மூலம் அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு அப்துல்லா எழுதிய இந்த கடிதத்தை தற்போது அம்பலமாக்கியுள்ள விக்கிலீக், இனி வரும் காலங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சக ஆவணங்களை வெளியிட போவதாக அறிவித்துள்ளது.