அரசியலுக்கு வருவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை!– சங்கக்கார மறுப்பு
இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அநுராதபுரம் தொகுதியின் ஊடாக அரசியலுக்கு நுழைவதாக ஊடகங்கள் மற்றும் இணை...


இந்நிலையில் அரசியலில் நான் நுழையவுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பிழையானது எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் நுழைவதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் குமார சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வில்லாத வேலை காரணமாக தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கேனும் தனக்கு நேரம் இல்லாத போது அரசியலுக்கு செல்வதற்கு இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் குமார் சங்கக்கார டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அண்மையில் அறிவித்தித்திருந்தார்.
சங்கக்கார திறமையாக விளையாடி வரும் சந்தர்ப்பத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பது அரசியல் மேடைகளில் ஏறுவதற்கென பல்வேறு செய்திகள் வெளியாகின.
ஆனாலும் நான் ஒரு போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும் எனக்கு தெரிந்த கிரிக்கெட் விளையாட்டை கொண்டு எதையாவது செய்ய முயற்சி செய்வேன். அது குறித்து இதுவரையில் சிந்திக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.