மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க அறுவர் குழு தீர்மானிக்கவில்லை: ஜோன் செனவிரத்ன
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில...


இது தொடர்பில் வெளியாகிய செய்தி போலியானதென அவர் பி.பி.சி செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என குறிப்பிட்ட அவர், இக்குழுவினால் இவ்வாறான பரிந்துரைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன கலந்துரையாடியதாகவும் கட்சியின் ஒற்றுமையுடன் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் செயற்படுவதற்கே இக்குழுவிற்கு முன்னிடம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.