மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை! சுசில் செய்த மோசடி அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கூட்டணியில் வேட்பு மனு வழங்க தீர்மானித்துள்ளதாக வெளியான அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிடவில்லை என...


அர்ஜுன ரணதுங்க தனது முகப்புத்தக கணக்கில் இதனை பதிவு செய்துள்ளார்.
ஊடகங்களிடம் குறித்த கடிதத்தின் பிரதி மாத்திரமே வெளியாகியது. அதன் முதல் பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையொப்பமிட ஒரு பகுதி உள்ள போதிலும் ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் உண்மை வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருப்பது தொடர்பில் நாட்டினுள் பல்வேறு கட்டுக்கதைகள் உருவாகிக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.