மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கும் தீர்மானத்தை மீளப்பெற மைத்திரி முயற்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றுமொரு யூடேன் திருப்பத்தை ஏற்பட...


மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவி ஊடகப்பணிப்பாளர் பதவி விலகினார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவர் தமது பதவி விலகலை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்த நடவடிக்கையை கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கிய தீர்மானத்தில் இருந்து யூடேன் திருப்பத்தை மேற்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தரப்பு மற்றும் ஆதரவுத் தரப்புக்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு காட்டும் எதிர்ப்பை அடுத்து மைத்திரிபால சிறிசேன தமது தீர்மானத்தை திரும்பப்பெற்றுக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.