சவூதி அரேபியாவிடம் ஸ்வீடன் பகீரங்க மன்னிப்பு கோரியது
சவூதி அரேபியாவின் தொடர் நெருக்கடிகளுக்கு ஆளான ஸ்வீடன் சவூதி அரேபியாவிடம் பகீரங்க மன்னிப்பு கோரியது. இது தொடர்பான முழு விவரம் பின் வ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_241.html

சவூதி அரேபியாவின் தொடர் நெருக்கடிகளுக்கு ஆளான ஸ்வீடன் சவூதி அரேபியாவிடம் பகீரங்க மன்னிப்பு கோரியது.
இது தொடர்பான முழு விவரம் பின் வருமாறு....
சவூதி அரேபியாவின் அரசியல் சாச சட்டமான இஸ்லாமிய சட்டங்களை ஸ்வீடன் அண்மையில் விமர்சித்திருந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சவூதி அரேபியா ஸ்வீடனுக்கான தனது தூதரை திரும்ப பெற்று, எங்களது இஸ்லாமிய சட்டத்தை விமர்சிக்க யாருக்கும் எந்த தகுதியும் இல்லை என்றும் அதற்காக நாங்கள் யாரிடமும் நற்சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்தது.
அதனை தொடர்ந்து ஸ்வீடன் உடனான அனைத்து உறவையும் முறித்து ஸ்வீடன் வியாபாரிகளுக்கு விசாவும் கிடையாது என்று அறிவித்து தொடர் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களுக்கு ஸ்வீடன் மன்னர் பகீரங்க மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த மன்னிப்பு கடிதத்தில்....
சவூதி அரேபியா மற்றும் ஸ்வீடனிடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும், சவூதி உடன் நட்புறவை விரும்புவதாகவும் இரு நாட்டின் உறவுகள் பலமிக்கதாக மாற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அது போல் சுவிடன் பிரதமர் பத்திரியைாளர் சந்திப்பில்
இஸ்லாமிய சட்டங்களை மதிப்பதிலும் இஸ்லாமிய குற்றவியல் நடைமுறைகளை செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டும் சவூதி மன்னரின் உணர்வுகளை மதிப்பதாகவும் இரண்டு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் நடந்த விசயங்களுக்காக ஸ்வீடன் வருந்துவதாவும், மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
சத்தியத்திற்கு சான்று பகர்ந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்...
தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி


Sri Lanka Rupee Exchange Rate