யாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன; ரோசி சேனநாயக்க

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க தெரிவித்தார...

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஐயத்தை மேற்கொண்ட சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது ஐனாதிபதி எமது நாட்டை மீள கட்டி எழுப்புவதில் ஆர்வமாக இருக்கின்றார். யுத்தத்தின் பின்னர் கடமையின் நிமிர்த்தம் மீண்டும் யாழ்ப்பாணம் வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். யுத்தகாலத்தில் வடபகுதி பெண்கள் சிறுவர்கள் அதிகளவு துன்பங்களை சந்தித்திருந்தார்கள் எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் அவர்களுக்குரிய புனர்வாழ்வு பணிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றுக்குரிய தீர்வைப் பெற்று கொடுக்க ஆவலாக உள்ளோம். பெண்களை தலைமைத்துவமாக கொண்டு செயற்படும் குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக காணப்படுகின்றது. எமது ஐனாதிபதியும் பிரதமரும் இணைந்து கடந்தகிழமை 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு பகுதியை செய்து முடித்திருக்கிறார்கள். அடுத்த பகுதியாக வடபகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மாருக்கான நலன் திட்டமாக ருபா 200000 வழங்கும் நிகழ்வு செயல்ப்படுத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஐயம் மேற்கொண்டு மக்களுக்கு உள்ள தேவைப்பாடுகள் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

இலங்கை 2637530376725772655

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item