தந்தையர் தினம் உருவான கதை!!
இன்று பிரான்சில் தந்தையர் தினமாகும் (fête des pères ). அன்னையர் தினம் போல் இல்லாமல் தந்தையர் தினமானது ஒரு வியாபார நோக்கத்திற்றாக...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_428.html

இன்று பிரான்சில் தந்தையர் தினமாகும் (fête des pères ). அன்னையர் தினம் போல் இல்லாமல் தந்தையர் தினமானது ஒரு வியாபார நோக்கத்திற்றாகவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறை 1950 ஆம் ஆண்டளவிலேயே பிரான்சிற்குள் ஊடுருவியது.
பதினைந்தாம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் தேவாலயங்கள், யேசுவின் தந்தையைக் கொண்டாடும் முகமாக தந்தையர்கள் தினம் என்று Saint-Joseph நாளினைக் கட்டாயப்படுத்தினார்கள். இதனை 1621ஆம் ஆண்டு போப் Grégoire XV கத்தோலிக்க நாடுகள் எங்கும் கட்டாயமாக்கினார். ஆனாலும் இது படிப்படியாகக் குறைந்து பல நுறர்றாண்டுகள் இல்லாது போய், 1910ம் ஆண்டு வரை மறக்கபட்டு வந்திருந்து.
போரில் ஈடுபட்டு தன் குழந்தைகளை மனைவியின்றி வளர்த்த இராணுவ வீரரான, தன் தந்தைக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணி, ஒரு நாளை, 1909 ஆம் ஆண்டு அமெரிக்கரான Sonora Smart Dodd நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். அது அங்கு மெதுவாகப் பரவிப் பெரும் கொண்டாட்டமாக மாறியது.

ஆனால் இதை வியாபாரிகள் பிரான்சிற்குள் கொண்டுவர அரை நூற்றாண்டு பிடித்தது. 1949ஆம் ஆண்டு Flaminaire எனும் ஒரு பிரெத்தோன் மாநிலத்தைச் சேர்ந்த விசைத்தீப்பொறி (Lighter - briquets) தயாரிப்பு நிறுவனம், ஓர் வியாபார உத்தியைக் கையாள தந்தையர்களைக் குறிவைத்தது. தங்களது வியாபாரத்தைப் பெருக்க, தந்தையர்கள் தினம் என்ற அமெரிக்க நடைமுறையை இங்கு அறிமுகப்படுத்தி, "ஒவ்வொரு தந்தையர்க்கும் ஒரு விசைத்தீப்பொறியை வாங்கிப் பரிசாகக் கொடுங்கள்" என விளம்பரப்படுத்தினார்கள். அன்றிலிருந்து தந்தையர்கள் தினத்திற்கு ஒரு விசைத்தீப்பாறி வாங்கிக் கொடுப்பது சம்பிரதாயமாகியது.

இந்த நடைமுறை ஒவ்வொரு வருடமும் தொடர, பிரான்ஸ் அரசாங்கம் 1952ம் ஆண்டு தந்தையர் தினத்திற்கான ஒரு நிலையான நாளைப் பிரகடனப்படுத்தியது. பிரான்சில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.