சந்திரிக்காவின் உத்தரவினால் நெருக்கடியில் மைத்திரி!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி மைத்திரிபால ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்...



மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி மைத்திரிபால ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க விடுத்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் இன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த - மைத்திரியின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு சந்திரிக்கா அறிவுறுத்தியுள்ளார்.

மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். மக்களை கவர்ந்து கொள்வதற்காக மைத்திரியும் மஹிந்தவும் இணைந்திருக்கும் படங்களை தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை விமர்சனம் செய்து வரும் சந்திரிக்கா அவரது படத்தைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சி, மைத்திரி அணி, மஹிந்த அணி என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் சந்திரிகாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related

தலைப்பு செய்தி 8160145808809177858

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item