மைத்திரி கொடுத்த கௌரவ பதவியை நிராகரித்த மஹிந்த!
சமகால ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த கௌரவ பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். அரசியலை விட்டு மஹிந்த வெளியேறினால் கௌரவமா...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_644.html

சமகால ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த கௌரவ பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
அரசியலை விட்டு மஹிந்த வெளியேறினால் கௌரவமான பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
எனினும் அந்த கெரளவப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
தான் அரசியலில் மீண்டும் ஈடுபட வேண்டும் என மக்கள் விரும்புவதால், கௌரவ பதவியை நிராகரிப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவிடம், மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆறு பேர் கொண்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தனர். இதன்போது மஹிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரப்பட்டது.
ஆனால் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடவோ, தேசியப்பட்டியலிலோ மஹிந்தவுக்கு இடமளிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அவர் அரசியலை விட்டு விலகினால், கௌரவமான பதவி ஒன்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்