பெண்களுடன் சேட்டை செய்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு
பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் இளைஞர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த...


பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் இளைஞர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வதிரி சந்தியில் நின்று இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் குழுவினரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
வதிரி சந்திக்கு அண்மையில் காலை 7 தொடக்கம் 7.30 மணி வரைக்கும், பிற்பகல் 3 தொடக்கம் 3.30 மணி வரைக்கும், மாலை 5.30 மணியளவிலும் ஒன்று கூடும் இந்த இளைஞர் குழு பாடசாலை தனியார் கல்வி நிலைய மாணவிகளுடன் சேட்டை செய்து வந்துள்ளனர்.
இதனால் பொதுமக்களும் பல அசௌகரியங்களை சந்தித்தனர். இந்நிலையில் பொதுமக்களும் பொது அமைப்புக்களும் நீதிமன்றுக்கு அளித்த முறைப்பாட்டு புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையிலேயே குறித்த உத்தரவை நீதிவான் கணேசராஜா நெல்லியடி பருத்தித்துறை காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் விடுத்திருந்தார்.