இந்தியாவில் கடும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இந்தியாவில் கடும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2338 ஆக உயர்வடைந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலேயே அதிக எண்ணிக்கையானோர் உயிரிழந...


இந்தியாவில் கடும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2338 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலேயே அதிக எண்ணிக்கையானோர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
ஆந்திர மாநிலத்தில் மாத்திரம் 1719 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெலுங்கானாவில் 585 பேரும் ஒடிசாவில் 25 பேர் மற்றும் குஜராத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மாநிலங்களில் அனல் காற்று வீசிவருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன