புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக வரலாறு காணாத வழக்கும் தீர்ப்பும்
லட்சக் கணக்கானோருக்கு கோடிக் கணக்கான டாலர்கள் நட்ட ஈடு வழங்கி கனடா நீதிமன்றம் தீர்ப்பு சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகை பிடிப...

![]() |
லட்சக் கணக்கானோருக்கு கோடிக் கணக்கான டாலர்கள் நட்ட ஈடு வழங்கி கனடா நீதிமன்றம் தீர்ப்பு |
புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறி, புகை பிடிப்பவர்கள் கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தனர்.
கனேடிய நீதிமன்ற சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்றாக இணைந்து ஒரே காரணத்துக்காக இந்த வழக்கை கொண்டு வந்தனர்.
இந்த வழக்கை புகை பிடித்ததால் மிகவும் மோசமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட ஒரு குழுவினரும், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு குழுவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.
எனினும் தீர்ப்பை எதிர்த்து இம்பீரியல் டொபாகோ, ராத்மேன்ஸ் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ் மறும் ஜெடிஐ மெக்டொனால்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இந்த வழக்கை 1998 ஆம் ஆண்டே பதிவு செய்திருந்தாலும், அண்மையில்தான் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.