இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது: - "டெலிகிராஃப்' நாளேடு பரபரப்பு தகவல்!
பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுதத்தைக் கடத்திச் சென்று, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_279.html
இது குறித்து ஐ.எஸ். பிரசார ஏட்டை மேற்கோள் காட்டி பிரிட்டனின்
பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுதத்தைக் கடத்திச் சென்று, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஐ.எஸ். பிரசார ஏட்டை மேற்கோள் காட்டி பிரிட்டனின் "டெலிகிராஃப்' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வரமாறு - ஐ.எஸ். அமைப்பிடம் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான நிதி குவிந்துள்ளது. இதனைக் கொண்டு இன்னும் ஓராண்டுக்குள் அணு ஆயுதத்தை வாங்க இயலும். பாகிஸ்தானில் உள்ள ஊழல் அதிகாரிகளுடன் தொடர்புடைய ஆயுதத் தரகர்கள் மூலமாக, அணு ஆயுதத்தை ஐ.எஸ்.ஸின் பாகிஸ்தான் கிளை வாங்க வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் அணு ஆயுதத்தை லிபியா, நைஜீரியா, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லலாம். இந்தத் திட்டம் கற்பனைக்கு எட்டாததாக உள்ளது எனத் தோன்றக் கூடும். ஆனால் மேற்கத்திய உளவு அமைப்புகள் இவ்வாறு நடக்கும் என அஞ்சுகின்றன. இவ்வாறு நடக்குமா என்ற நிலை இருந்தது போக, ஒரே ஆண்டில் இது நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ்.ûஸக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதோடு, அந்த நாட்டுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மீது மாபெரும் தாக்குதலை நிகழ்த்த ஐ.எஸ். திட்டமிட்டு வருகிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. "அணு ஆயுதம் இல்லாவிட்டால் என்ன? சில ஆயிரம் டன் அளவு அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் போதாதா? அதை உருவாக்குவது சுலபம்தான்' என்று ஐ.எஸ். பிரசார ஏட்டில் குறிப்பிட்டிருப்பதாக "டெலிகிராஃப்' தெரிவித்துள்ளது.