மகள்களுடன் பிரித்தானியா வந்த ஒபாமாவின் மனைவி: பிரதமர் கெமரூன், இளவரசர் ஹரி ஆகியோருடன் சந்திப்பு(வீடியோ இணைப்பு)
பிரித்தானியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பிரதமர் கெமரூன், இளவரசர் ஹரி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க அதி...


பிரித்தானியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பிரதமர் கெமரூன், இளவரசர் ஹரி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தனது மகள்கள் மற்றும் தாயாருடன் இரண்டு நாள் பயணமாக பிரித்தானியா வந்துள்ளார்.
இந்நிலையில் 10 டவுனிங் ஸ்டிரீட் வந்த அவரை பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் அவரது மனைவி சமந்தா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கெமரூனுடன் பேசிய மிச்செல் வறுமையினால் கஷ்டப்படும் பெண்களுக்கு கல்வி கிடைக்கவேண்டும் என்பது குறித்து பேசினார்.
;மேலும் இதை அவசர பொருளாதார பிரச்சனையாக கருதவேண்டும் அறிவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக பிரித்தானியாவின் லண்டன் நகரில் வந்திறங்கிய அவர் கென்சிங்டன் அரண்மனையில் இளவரசர் ஹரியை சந்திந்து பேசினார்.
அரண்மனைக்கு வந்த அவர்களை இளவரசர் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும் அவர்களை சந்திப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்ற மிச்செல் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது லெட்ஸ் கேர்ள்ஸ் லேர்ன்(Lets Girl Learn) அமைப்பின் நோக்கங்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.