தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், நிமால் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_600.html

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், நிமால் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது தார்மீக ரீதியாக பொருத்தமற்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, தூய்மையான ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Sri Lanka Rupee Exchange Rate